- Description
- Information
- Reviews
(0)
வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிட, சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும்ப, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இருக்கின்றன. இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.மன அழுத்தம்,ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது.சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.