சாதாரண அரிசியை விட சாமை அரிசியில் ஏழு மடங்கு நார்ச்சத்துக்கள் உள்ளது. உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருப்பது நார்ச்சத்து. சர்க்கரை அளவானது உடலில் அதிகம் உள்ளவர்கள் இந்த சாமை அரிசியை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவு குறையும். மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்து நிறுத்தும்.